இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தமிழ் சினிமாவின் நடிகர் விக்ரம் சமீபத்தில் சந்தித்து பேசி உள்ள புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
நடிகர் விக்ரம் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திரசிங் தோனி சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமீபத்தில் இணையத்தில் வைரலாகி கொண்டு வருகின்றன.
தற்பொழுது விக்ரம் அவரது மகன் துருவ் நடித்த 'மகான்' திரைப்படம் வெளிவரும் நிலையில் ஐ.பி.எல் போட்டிகளின் ஏலம் நடக்கவிருக்கும் நிலையில் இருவரும் சந்தித்து பேசியுள்ளது பரப்பாகியுள்ளது.