ஆர்.ஆர்.ஆர் படத்தின் மறு வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியது, இதனையடுத்து பல படங்களின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. குறிப்பாக பொங்கலுக்கு வெளியாக வேண்டிய ஆர்.ஆர்.ஆர், வலிமை போன்ற படங்களின் வெளியீடு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து தயாரிப்பு நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் கொரோனா சற்று குறைய தொடங்கியுளள நிலையில் அரசு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்துள்ளது. திரையரங்குகளில் 100 சதவீத இருக்கை அனுமதி கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளதாக நேற்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.