பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'ராதேஷ்யாம்' திரைப்படத்தின் மறு வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான படம் 'ராதேஷ்யாம்'. 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகியிருக்கும் இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ் , மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
கடந்த ஜனவரி மாதத்தில் வெளியாக வேண்டிய ராதேஷ்யாம் படம் கொரோனா பரவல் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில் படத்தின் மறு வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது, அந்த வகையில் வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என 'ராதேஷ்யாம்' படக்குழு அறிவித்துள்ளது.