"செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை பயப்படும்டா" சிம்பு பிறந்தநாளை முன்னிட்டு வெளியான 'பத்துதல' சிறப்பு டீசர்

Update: 2022-02-03 12:15 GMT

நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு 'பத்துதல' படத்தின் விளம்பர வீடியோ வெளியாகி பரபரப்பாகியுள்ளது.




 


இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாள், இந்நிலையில் அவரது பிறந்தநாளை முன்னிட்டு 'பத்துதல' படக்குழுவினர் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் 'பத்துதல' படத்தில் சிம்புவின் கதாபாத்திரத்தை கூறும் வகையில் அந்த வீடியோ அமைந்துள்ளது, இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்பு கே.ஜி.ஆர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.




 


ஓபலி என் கிருஷ்ணா இயக்கும் பத்து தல படத்தில் கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் சிம்புவுடன் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார்.

Similar News