மைக்கேல் மதன காமராஜன் 'பீம்பாய்' மறைந்தார்

Update: 2022-02-09 14:00 GMT

பீம்பாய் என்கின்ற கதாபாத்திரத்தின் மூலம் பிரபலமான நடிகர் பிரவீன் குமார் மாரடைப்பால் காலமானார்.




 


"பீம்பாய்! பீம்பாய்!! அந்த லாக்கரில் இருக்கிற 6 லட்சம் பணத்தை அவிநாசிட்ட கொடு" என்ற காமெடி வசனம் 90'களில் மிகப்பிரபலம், இந்த வசனம் இடம்பெறும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் கமலின் உதவியாளராக வருவார் இந்த பீம்பாய். அப்போதைய சிறுவர்களின் மத்தியில் இவரின் கதாபாத்திரம் மிகப்பிரபலம் அதற்கு முன்பு இவர் மகாபாரதம் தொடரில் நடித்தவர்.




 


74 வயதான இவரின் பெயர் பிரவீன் குமார் சோப்தி இவர் சமீப காலமாக மார்பக புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார், தற்பொழுது உடல்நலம் குன்றியதால் இவர் மரணமடைந்தார். இவரின் மறைவு திரையுலகிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Similar News