இன்ஸ்டாகிராமில் இரண்டு மில்லியன் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடிகை கல்யாணி பிரியதர்ஷன்.
இயக்குனர் பிரியதர்ஷன், நடிகை லிசி ஆகியோரின் மகள் நடிகை கல்யாணி. தெலுங்கில் அறிமுகமானாலும் தற்போது தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார் வளர்ந்து வரும் நடிகைகளில் குறிப்பிடத்தக்கவர் இந்த கல்யாணி பிரியதர்ஷன். மேலும் அவர் நடிக்கும் படங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று வருகின்றன.
சமூக வலைத்தளத்தில் தொடர்ச்சியாக பரபரப்பாக உள்ள நடிகைகளில் கல்யாணி பிரியதர்ஷனும் ஒருவர். இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இரண்டு மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின்தொடர்கின்றனர் இந்த தகவலை மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் கல்யாணி பிரியதர்ஷன்.