இயக்குனர் ஷங்கரிடம் தெலுங்கு பட ஹீரோ மகேஷ்பாபு மன்னிப்பு கேட்ட சம்பவம் பற்றி பகிர்ந்துள்ளார்.
நடிகர் பாலகிருஷ்ணா நடத்தும் ரியாலிட்டி ஷோ ஒன்றில் சமீபத்தில் நடிகர் மகேஷ்பாபு கலந்துகொண்டார் அப்பொழுது அவர் பகிர்ந்து கொண்ட சம்பவம் ஒன்று, 'ஒரு முறை சென்னையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் மகேஷ் பாபு அவரது நண்பரும் குடும்பம் சகிதமாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது அவரை தேடி இரண்டு பெண்கள் மகேஷ் பாபுவிடம் வந்து ஆட்டோகிராப் கேட்டு உள்ளனர் ஆனால் மகேஷ்பாபு நான் பர்சனலாக வந்துள்ளேன் என ஆட்டோகிராப் போட மறுத்துவிட்டார்.
பின்னர் அந்த இரு பெண்களும் இயக்குனர் ஷங்கரின் மகள்கள் என்ற விஷயம் உடனே மகேஷ்பாபுவுக்கு தெரியவர அதே ஹோட்டலில் அடுத்த தளம் ஒன்றில் இருந்த இயக்குனர் ஷங்கரை நேரிலேயே தேடிச்சென்று மகேஷ்பாபு தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்துள்ளார். ஆனால் இயக்குனர் ஷங்கரும் அது குறித்து ஒன்றும் தவறு இல்லை என கூறியதாக. தெரிவித்துள்ளார் இந்த சூழ்நிலையை பாலகிருஷ்ணா'விடம் மகேஷ்பாபு விளக்கினார்.