ஆந்திர முதல்வரை தெலுங்கு திரையுலகினர் சந்திக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த வருடம் சினிமா டிக்கெட் கட்டணங்களை அதிரடியாக அம்மாநில அரசு குறைத்து உத்தரவிட்டது, இந்நிலையில் மிகப்பெரும் செலவில் தயாரிக்கப்பட்ட படங்கள் கண்டிப்பாக கடும் பாதிப்புக்கு உள்ளாகும் என தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் கருத்துக்கள் கூறிவந்தனர். இதுதொடர்பாக தெலுங்கு திரையுலகத்தினர் ஆந்திர முதல்வரை சந்திக்க தயாராகினர்.
இந்நிலையில் தெலுங்கு திரையுலகத்தின் முன்னணி நடிகர்களான சிரஞ்சீவி, மகேஷ் பாபு, பிரபாஸ், இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்டோர் இன்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்தித்து பேச ஐதராபாத்தில் இருந்து ஒரே விமானத்தில் பயணம் செய்தனர். பேச்சுவார்த்தை தொடர்பான விபரங்கள் நாளை வெளியாகும் என தெரிகிறது.