மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடைசியாக நடித்த 'ஜேம்ஸ்' படத்தின் டீசர் வெளியாகி திரையுலக ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.
கன்னட திரையுலகில் மறைந்த நடிகர் ராஜ்குமாரின் இளையமகன் புனித் ராஜ்குமார், இவர் பிரபல கன்னட திரைப்பட கதாநாயகன் ஆவார். இவர் கடந்த 2021'ம் ஆண்டு அக்டோபர் மாதம் மாரடைப்பால் உயிரிழந்தார். இந்த நிகழ்வு அவரின் ரசிகர்களை பெரும் அளவில் பாதிப்படைய செய்தது, ஒட்டுமொத்த கர்நாடக திரையுலகம் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகமே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் அவர் கடைசியாக நடித்த படம் 'ஜேம்ஸ்', இந்தப்படத்தின் போஸ்டர் கடந்த குடியரசு தினம் அன்று வெளியானது. அதனைத்தொடர்ந்து இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகியது புனித் ராஜ்குமார் நடித்த கடைசி படம் என்பதால் இப்படத்தின் டீசரை ரசிகர்கள் கண் கலங்கி பார்த்து வருகின்றனர்.