மகான் படத்தில் வாணி போஜன் நடித்த காட்சிகள் நீக்கப்பட்டதற்கு படக்குழு விளக்கம் தெரிவித்துள்ளது.
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், சிம்ரன் நடிப்பில் வெளியான படம் 'மகான்', இப்படத்தில் வாணி போஜன் இன்னொரு நாயகியாக நடிப்பதாக அறிவிக்கப்பட்டது, விக்ரமுடன் வாணிபோஜன் இருக்கும் புகைப்படங்களும் வெளிவந்தன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் வெளியான மகான் படத்தில் வாணிபோஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் இடம் பெறவில்லை, படம் ஏற்கனவே 2 மணி நேரம் 42 நிமிடம் நீளத்தை கொண்டிருப்பதால் படத்தின் நீளத்தை குறைக்க வேண்டிய அவசியத்தில் வாணி போஜன் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்பட்டு இருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.