லத்தி படத்தின் படப்பிடிப்பின்போது விஷாலுக்கு கையில் ஏற்பட்ட காரணத்தினால் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தற்பொழுது நடிகர் விஷால் தனது தயாரிப்பு நிறுவனம் மூலமாக தயாரித்து 'லத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆக்ஷன் படமான இதில் சண்டைக் காட்சிகள் அதிகம், சண்டை இயக்குனர் பீட்டர் ஹெயின் சண்டை காட்சி இயக்கும்போது ஒருகட்டத்தில் விஷாலின் ஒரு கை சுவரில் மோதி காயம் ஏற்பட்டது. பின்னர் முதலுதவி எடுத்துக்கொண்டு நடித்தாலும் வலி குறையவில்லை நடிகர் விஷாலுக்கு.
பின்னல் வலியால் துடித்த விஷால் மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்தபோது உள்காயம் அதிகமாக இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் படப்பிடிப்பை ஒரு மாதம் தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர்கள் ரமணாவும், நந்தாவும் அறிவித்துள்ளார்கள். மேலும் விஷால் சிகிச்சைக்காக கேரளா செல்கிறார்.