சர்தார் உரிமையை கைப்பற்றிய பிரபல ஓ.டி.டி நிறுவனம்

Update: 2022-02-13 14:15 GMT

இயக்குனரும் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'சர்தார்', படத்தின் உரிமையை பிரபல ஓ.டி.டி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.




 



கார்த்தி இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் 'சர்தார்'. இயக்குனர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையில் உருவான இப்படத்தில் ராஷி கண்ணா கார்த்தி ஜோடியாக நடித்துள்ளார். இப்படத்தில் கார்த்தி'யின் தோற்றம் வித்தியாசமாக இருப்பதாக முதல் பார்வையில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்தது.




 


இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி உரிமையை நடிகர் அல்லு அர்ஜுன்'னின் ஓ.டி.டி நிறுவனமான 'ஆஹா தமிழ்' வாங்கி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் திரையரங்கில் வெளியான பிறகு இப்படம் ஓ.டி.டி'யில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News