மாதவன் இயக்கி நடித்த 'ராக்கெட்ரி' படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனந்த் மகாதேவன் இயக்கத்தில் 'ராக்கெட்ரி' படத்தில் மாதவன் நடிக்கத் துவங்கினார், பின்னர் படத்திலிருந்து ஆனந்த் மகாதேவன் விலகிய நிலையில் மாதவனே இயக்குனர் பொறுப்பை ஏற்றார். இப்படம் இந்திய விண்வெளித்துறை விஞ்ஞானியாக பணிபுரிந்து உளவு பார்த்ததாக சொல்லப்பட்ட நம்பி நாராயணன் கதைதான் இப்படத்தின் கரு.
இப்படத்தின் டிரைலர் கடந்த வருடம் வெளியான நிலையில் கொரோனா காரணமாக பட வெளியீடு தள்ளிப் போனது, தற்பொழுது 'ராக்கெட்ரி' வரும் ஜூலை 1'ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் வெளியாக உள்ளது.