வெங்கட்பிரபு இயக்கத்தில் பூஜா ஹெக்டே

Update: 2022-02-18 14:30 GMT

பீஸ்ட் படத்தின் நாயகி பூஜா ஹெக்டே அடுத்தபடியாக இயக்குனர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார்.




 


தமிழில் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான நாயகி பூஜா, தற்பொழுது விஜயின் 'பீஸ்ட்' படத்தின் நாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்ற அரபி குத்து பாடல் சமூகவலைதளங்களில் பெருமளவில் வைரலாகி வருகிறது.




 


இந்நிலையில் தற்பொழுது அசோக் செல்வன் நடிப்பில் மன்மதலீலை படத்தை இயக்கிவரும் இயக்குனர் வெங்கட் பிரபு அடுத்தபடியாக நாக சைதன்யாவை வைத்து ஒரு படம் இயக்குகிறார் அப்படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவிருக்கிறார்.

Similar News