'வலிமை'யை பார்க்க உலகின் மிகப்பெரிய திரையரங்குக்கு செல்லும் ஜான்வி கபூர்
உலகின் மிகப்பெரிய திரையரங்கில் 'வலிமை' படத்தை பார்க்கத் தயாராகும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர்.
இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து இன்னும் சில நாட்களில் வெளியாகவிருக்கும் படம் 'வலிமை', மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் தயாரித்துள்ள இப்படத்தை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.
வரும் 24ஆம் தேதி வலிமை திரைப்படம் வெளியாகும் அன்று இத்திரைப்படத்தை பிரான்ஸில் உள்ள திரையரங்கில் பார்ப்பதை திட்டமிட்டு வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஜான்வி கபூர், உலகின் மிகப் பெரிய திரையரங்குகளில் ஒன்றான பாரிஸ் நகரின் 'லே கிராண்ட் ரெக்ஸ்' திரையரங்கில் தான் இப்படத்தை ஜான்வி கபூர் பார்க்க உள்ளார்.