ஓட்டு போட்டுவிட்டு மன்னிப்பு கேட்டார் விஜய் - ஏன்?

Update: 2022-02-19 14:15 GMT

இன்று வாக்கு செலுத்த வாக்குச்சாவடிக்கு வந்த விஜய் பொது மக்களிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் இணையத்தில் வைரலாகி வருகிறது.




தமிழகத்தில் 21 மாநகராட்சிகள் உள்ளிட்ட 138 நகராட்சிகள், மற்றும் 490 பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அமைப்புகளக்கான ஓட்டுப்பதிவு இன்று காலை முதல் துவங்கியது. வாக்குப்பதிவு துவங்கிய சிறிது நேரத்திலேயே வந்து வாக்களித்தார் நடிகர் விஜய்.




அப்பொழுது விஜய் ஓட்டுப்போட வருவதை அறிந்த ரசிகர்கள் அங்கு குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனால் ஓட்டுச்சாவடியில் வாக்களிக்க வந்தவர்களில் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனையடுத்து வாக்களித்து விட்டு வெளியில் வந்த விஜய் தன்னால் சிரமத்திற்கு உள்ளான பொது மக்களிடம் மன்னிப்பு கோரினார். இந்த வீடியோ வைரல் ஆகி காலை முதல் சமூக வலைதளங்களில் பரபரப்பாக வலம் வருகிறது.

Similar News