'அஜித் படம் வெளியாகும் பொழுது விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடுகிறார்கள்' என வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.
வலிமை படம் அடுத்த வாரத்தில் திரைக்கு வரும் நிலையில் தற்போது அதன் புரமோஷன் பணிகளை தொடங்கி வைத்து படக்குழுவினர் பேட்டி அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தயாரிப்பாளர் போனி கபூர் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது, "அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் மிகவும் பெருந்தன்மையான மனம் கொண்டவர்கள் அஜித் படங்கள் வெளியாகும்போது விஜய் ரசிகர்கள் அதனை கொண்டாடுகிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
இரண்டரை வருடங்களாக தயாரிப்பில் இருந்த 'வலிமை' படம் அடுத்த வாரம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.