தமிழில் இதுவரை நடிக்காத ஏ .ஆர்.ரகுமான் முதன்முதலில் மலையாளத்தில் தோன்றி நடத்தியுள்ளார்.
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இதுவரை படங்களில் பாட்டு பாடி நடித்தது கிடையாது, தற்பொழுது மோகன்லால் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'ஆராட்டு' என்ற படத்தில் பாடகர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் மேடை நிகழ்ச்சி செய்வது போன்று ஒரு முழு பாடல் முழுவதையும் பாடி நடித்துள்ளார்.
படத்தின் கதையின்படி மேடையில் ஏ.ஆர்.ரகுமான் தோன்றி காதலன் படத்தில் ஹிட்டான 'முக்காலா முக்காபுலா' என்ற பாடலை பாடி ரசிகர்கள் மத்தியில் நிகழ்ச்சி நடத்துவது போல் ஒரு காட்சி, அதன் பின்னணியில் மோகன்லால் இடம்பெறும் சண்டைக் காட்சியும் உள்ளது. தமிழில் கூட இதுவரை நடிக்காத ஏ.ஆர்.ரகுமான் தற்போது மலையாளத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.