'எல்லாம் கனவு மாதிரி இருக்கு' - அமிதாப்புடன் நடிப்பது குறித்து பிரபாஸ்

Update: 2022-02-21 00:30 GMT

"கனவு போல் உள்ளது" என அமிதாப்பச்சனுடன் நடிப்பது குறித்து பிரபாஸ் தெரிவித்துள்ளார்.




பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் படம் ஒன்றில் பிரபாஸ் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக தீபிகா படுகோன் நடிக்கிறார், மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சனும் நடிக்க சம்மதித்துள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இப்படத்தின் தலைப்பு இன்னும் முடிவாகவில்லை.




 


இதனையடுத்து முதன்முறையாக அமிதாப்புடன் நடிப்பது குறித்து பிரபாஸ் கூறுகையில் "அமிதாப்பச்சனுடன் நடிப்பது எனக்கு கனவு போல் இருக்கிறது" என தெரிவித்துள்ளார்.

Similar News