இசை ரசிகர்களுக்காக இளையராஜா'வின் சர்ப்ரைஸ் அறிவிப்பு

Update: 2022-02-21 12:15 GMT

இளையராஜாவின் புகழ் பெற்ற 'ஹவ் டு நேம் இட்' ஆல்பம் தற்பொழுது இரண்டாம் பாகம் வெளியிடப்போவதாக இளையராஜா அறிவித்துள்ளார்.




இதுதொடர்பாக இசைஞானி இளையராஜா வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, "திரைப்படங்கள் பாகம்-1 பாகம்-2 என வருவதை பார்க்கிறோம், அதேபோல் மியூசிக்கில் ஏன் வரக்கூடாது அப்படியான ஒரு யோசனை எனக்கு வந்தது அதனால் தான் உங்களுக்கு பிரபல 'ஹவ் டு நேம் இட்' இசைத் தொகுப்பை இரண்டாம் பாகம் தயாரித்து விரைவில் வெளிவரவிருக்கிறது" என கூறியுள்ளார்.




இசைக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஹவ் டு நேம் இட்' ஆல்பம் வயலின், புல்லாங்குழல் உள்ளிட்ட பத்து இசைக்கருவிகளை முதன்மையாக கொண்டு இந்த ஆல்பம் உருவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News