இயக்குனர் பரதனின் மனைவியும் நடிகையுமான லலிதா காலமானார்

Update: 2022-02-23 14:15 GMT

பழம்பெரும் நடிகை லலிதா உடல்நலக்குறைவால் காலமானார், அவருக்கு வயது 74.





நாடக நடிகையாக தனது கலைப் பயணத்தைத் தொடங்கி நடித்தார் நடிகை லலிதா, பின்னர் மலையாளத்தில் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானார். தமிழில் காதலுக்கு மரியாதை, பரமசிவன், அலைபாயுதே, மாமனிதன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். கேரள நாடக அகாடமியின் தலைவராகவும் உள்ளார் லலிதா. இதுவரை மொத்தம் 550 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் இயக்குனர் பரதனின் மனைவி ஆவார்.




 


சமீப காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று இரவு காலமானார், லலிதாவின் இறுதிச்சடங்குகள் வடக்கன்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நடைபெறுகிறது.

Similar News