வலிமை படத்தை சென்னையில் வந்து தயாரிப்பாளர் போனி கபூர், ஹூமா குரோஷி ஆகியோர் அஜித் ரசிகர்களுடன் அமர்ந்து திரையரங்கில் பார்த்து கொண்டாடினர்.
கடந்த இரண்டரை ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த படம் அஜித்குமாரின் 'வலிமை', ஹெச்.வினோத் இயக்கிய இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இப்படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது பல்வேறு இடங்களில் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
'வலிமை' படத்தை பார்ப்பதற்காக மும்பையிலிருந்து தயாரிப்பாளர் போனி கபூர் மற்றும் நாயகி ஹூமா குரோஷி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், கார்த்திகேயா, ஹூமா குரோஷி ஆகியோர் அஜித் ரசிகர்களுடன் அமர்ந்து இப்படத்தை பார்த்து மகிழ்ந்தனர்.