இதை எதிர்பார்க்கலைல..!" - சிம்புவின் புது அவதாரம்

Update: 2022-02-24 13:45 GMT

மாநாடு வெற்றிக்கு பிறகு நடிகர் சிம்பு புது அவதாரம் எடுத்துள்ளார்.




 


பிக்பாஸ் அல்டிமேட் என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி தொடர், இந்த நிகழ்ச்சியை இது வரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார் சில பணிகள் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடியவில்லை என அதிலிருந்து விலகினார் கமலஹாசன். இந்நிலையில் அடுத்த மூன்று வாரங்களுக்கு நிகழ்ச்சியை நடத்த வேண்டி இருப்பதால் யாரால் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக நடத்த முடியும் என பெரும் எதிர்பார்ப்புகள் நிலவி வந்தன.




இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்குவது உறுதியாகி உள்ளது. இதற்கான ப்ரமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் ஸ்டைலாக வரும் சிம்பு 'எதிர்பார்க்கலைல..! நானும் எதிர்பார்க்கல..!" என ஸ்டைலாக பேசும் புரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.

Similar News