"வெற்றி, தோல்வி எல்லாம் ஒன்றுதான்" - வினோத்துக்கு பாடம் சொன்ன அஜித்

Update: 2022-02-24 13:45 GMT

வெற்றி தோல்வி எப்போதும் வாழ்வில் ஒன்றாகத்தான் இருக்கவேண்டும் என அஜித் கூறியுள்ளதாக இயக்குனர் ஹெச்.வினோத் தெரிவித்துள்ளார்.




 


படம் அறிவிக்கப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளியாக காலம் எடுத்துக்கொண்ட படம் 'வலிமை', இப்படத்தின் அப்டேட் கேட்டு நாளுக்கு நாள் ரசிகர்கள் பல இடங்களில் காத்திருந்தது தமிழ் சினிமா வரலாற்றில் மறக்க முடியாத ஒன்று. இந்நிலையில் கொரோனா முதல் அலை, இரண்டாம் அலை, மூன்றாம் அலை என தொடர்ச்சியாக வந்த காரணத்தினால் இப்படத்தின் வெளியீடு மேலும் மேலும் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. இன்று படம் தமிழகத்தில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் அஜித் கூறிய ஒன்றை நினைவு கூர்ந்துள்ளார்.





அப்படி அஜித் கூறியதாக எச் வினோத் கூறியதாவது, "இதுவும் கடந்து போகும் என்றார் அஜித், நம்மைச் சுற்றி நல்லது நடந்தாலும் சரி கெட்டது நடந்தாலும் சரி எதுவும் நிரந்தரமில்லை என நீங்கள் நினைத்துக் கொண்டால் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வெற்றி-தோல்வி எப்பொழுதும் வாழ்வில் ஒன்றாகத்தான் இருக்கும்" என்றார் இதைக் கேட்டு மிகவும் நம்பிக்கையுடன் இருந்தாராம் இயக்குனர் வினோத். படம் எதிர்பார்த்தபடி இன்று வெற்றி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News