மறைந்த கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் நினைவிடத்தில் நடிகர் விஜய் அஞ்சலி செலுத்தினார்.
கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகனான புனித் ராஜ்குமார் தென்னிந்தியாவின் பிரபல நடிகர் ஆவார், இவர் கடந்த அக்டோபர் மாதம் 29'ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார். 46 வயது நிரம்பிய இவர் மறைந்தது திரையுலகை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மறைந்து ஐந்து மாதங்களுக்கு மேல் ஆனாலும் அவரின் மறைவை ரசிகர்களும் திரையுலகினரும் நினைவுகர்ந்து வருகின்றனர்.
பல பிரபலங்கள் அவரை நினைவிடத்திற்கு சென்று அடிக்கடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர், அந்த வகையில் நடிகர் விஜய் இன்று பெங்களூருவில் உள்ள அவரது நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தினார், அந்த இதன் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.