மாறன் படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளன.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் நடித்துள்ள படம் 'மாறன்' திரைப்படம் ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருப்பதாக படக்குழு சமீபத்தில் அறிவித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இப்படம் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் அடுத்த மார்ச் மாதம் இரண்டாவது வாரத்தில் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் 'மாறன்' திரைப்படம் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இன்னும் இரு தினங்களில் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக படக்குழு வெளியிட உள்ளது.