சூப்பர் ஹீரோ தோனியின் நாவலை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்

Update: 2022-02-26 14:15 GMT

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் நட்சத்திர வீரருமான தோனி நடித்துள்ள அதர்வா தி ஆர்ஜின் என்ற கிராபிக்ஸ் நாவலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார்.




 


இந்திய கிரிக்கெட் வீரர் தோனிக்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் உண்டு இவரை வைத்து அதர்வா தி ஆர்ஜின் என்கிற கிராபிக்ஸ் நாவலை வெளியிட உள்ளனர். இது குறித்து எழுத்தாளர் ரமேஷ் தமிழ்மணி கூறியதாவது, "தோணியை நாயகனாக வைத்து உருவான நாவலை ரஜினி சார் வெளியிட்டது எங்களை மகிழ்ச்சியாக இருக்கச் செய்துள்ளது.




 


தோனி என் மீதும் என் கதையின் மீது வைத்திருந்த நம்பிக்கை மற்றும் புத்தகம் குறித்த பயணத்தில் என்னுடன் நெருக்கமாக பணியாற்ற விதம் ஆகியவற்றுக்காக நான் அவருக்கு என்றும் நன்றியுடன் ஆக இருப்பேன்" என கூறினார்.

Similar News