வெளியானது மம்முட்டியின் "சி.பி.ஐ சீரிஸ்" படத்தலைப்பு

Update: 2022-02-27 17:30 GMT

வெளியானது மம்முட்டி நடித்த "சி.பி.ஐ 5" பட தலைப்பு.




 


மம்முட்டியின் திரையுலக வாழ்வில் அவருக்கு மிகப்பெரிய பெயரை ஈட்டித் தந்த படம் சி.பி.ஐ, 1988-ல் வெளியான ஒரு "சி.பி.ஐ டைரிக்குறிப்பு" படம் தான் மம்முட்டிக்கு அதிக அளவில் ரசிகர்களை பெற்றுத் தந்தது. அடுத்தடுத்த பாகங்களாக ஜாக்ரதா, சேதுராம ஐயர் சி.பி.ஐ, நேரறியான் சி.பி.ஐ என்ற பெயர்களில் 34 வருடங்களில் நான்கு படங்கள் வெளியாகியுள்ளன. இவை அனைத்துமே பெரிய அளவில் வெற்றிபெற்றன.




 


இந்நிலையில் ஐந்தாவது படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்துள்ளது. இப்படம் இயக்குனர் மது, கதாசிரியர் சுவாமி கூட்டணியில் உருவானது, இப்படத்தின் டைட்டில் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது இப்படத்திற்கு "தி ப்ரெய்ன்" என டைட்டில் வைத்து அதிகாரப்பூர்வ போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Similar News