தனுஷின் மாறன் பட ட்ரெய்லரை ரசிகர்கள் வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் "மாறன்". சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் தனுஷ், மாளவிகா மோகனன் இணைந்து நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த அடுத்த மாதம் டிஸ்னிப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டிரைலரை தனது ரசிகர்களை வைத்து தனுஷ் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்த வாரம் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக உள்ளது அதனை தனுஷ் ரசிகர்களை வெளியிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.