தள்ளிப்போன "டான்" வெளியீடு - ஆர்.ஆர்.ஆர் படம் காரணமா?

Update: 2022-03-03 10:15 GMT

சிவகார்த்திகேயன் டான் பட வெளியீடு தள்ளிப்போகியுள்ளது.




 


இயக்குனர் சிபிச் சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன் நடித்துள்ள படம் "டான்", லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி ஆகியோர் நடித்துள்ளனர். அனிருத் இசையில் பாடல்கள் உருவாகியுள்ளது.




இப்படம் மார்ச் 25'ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இயக்குனர் ராஜமௌலியின் ஆர்.ஆர்.ஆர் படம் மார்ச் 25'ல் வெளியாக இருப்பதால் "டான்" படத்தை வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். இதன் காரணமாக வருகின்ற மே 13'ம் தேதி "டான்" வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது படக்குழு. படத்தின் சாட்டிலைட் உரிமையை கலைஞர் தொலைக்காட்சி பெற்றுள்ளது.

Similar News