விருமன் ரிலீஸ் எப்போது? கோடையில் வருமா?

Update: 2022-03-03 10:15 GMT

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்துள்ள விருமன் படம் மே மாதம் வெளியாகும் என தகவல்கள் தெரிவித்துள்ளன.




கொம்பன் படத்திற்கு பிறகு இயக்குனர் முத்தையா இயக்கத்தில் மீண்டும் நடிகர் கார்த்தி நடிக்கும் படம் "விருமன்", இப்படத்தில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி ஷங்கர் முதன் முறையாக அறிமுகமாகி கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா தயாரிக்கின்றனர்.




இந்நிலையில் இப்படத்தின் வெளியீடு எப்போது என்று அறிவிக்கப்படாமல் இருந்த நிலையில் மே மாதம் படம் வெளியாக இருக்கலாம் என படக்குழுவினர் தெரிவித்ததாக தகவல்கள் வெளியாகின்றன.

Similar News