யுவன் சங்கர் ராஜா'வை நடனமாட வைத்த சுந்தர்.சி

Update: 2022-03-07 09:00 GMT

இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவை தனது படத்தின் பாடல் ஒன்றில் நடனமாட வைத்துள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.




இயக்குனர் சுந்தர்.சி தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறார், இதில் ஜீவா, ஸ்ரீகாந்த், ரைசா வில்சன், அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்று வருகிறது.





இந்நிலையில் இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் ஒன்றில் யுவன் சங்கர் ராஜா நடனமும் ஆடியுள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது, இதனை திவ்யதர்ஷினி பகிர்ந்துள்ளார் இவருடன் நடனமாடிய நடிகர்கள் அனைவரும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Similar News