பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோரைத் தொடர்ந்து தற்போது பாலிவுட் நடிகை அலியா பட் ஹாலிவுட்டில் நடிக்க உள்ளார்.
பாலிவுட் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் ஆலியா பட், இவர் சமீபத்தில் நடித்த "கங்காபாய் கத்தியவாடி" படம் சமீபத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் அலியாபட் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர் படம் இந்த மாதம் 25'ம் தேதி வெளியாக உள்ளது.
இந்நிலையில் நெட்ப்ளிக்ஸ் புதிதாக தயாரிக்க உள்ள ஹாலிவுட் படத்தில் ஆலியா பட் நடிக்க உள்ளார். கால் கடோட், ஜெமி டோர்னன் ஆகியோருடன் இப்படத்தில் ஆலியாபட் நடிக்க உள்ளதாக 'நெட்ப்ளிக்ஸ்' அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்திற்கு "ஹார்ட் ஆப் ஸ்டோன்" என தலைப்பு வைத்துள்ளார்கள். இதனால் 'அலியா பட்'டிற்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.