கேரளா சிகிச்சை முடிந்து மீண்டும் படப்பிடிப்புக்கு திரும்பிய விஷால்

Update: 2022-03-08 08:45 GMT

'லத்தி' படத்தின் ஏற்பட்ட காயம் காரணமாக கேரளாவில் சிகிச்சையில் இருந்த விஷால் தற்போது குணமடைந்து திரும்பியுள்ளார்.




 


தற்பொழுது அறிமுக இயக்குனர் வினோத் குமார் என்பவரின் இயக்கத்தில் 'லத்தி' படத்தில் நடித்து வந்தார் விஷால், ஆக்சன் படமாக உருவான இப்படத்தின் சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் வடிவமைத்து இயக்கி வந்தார், இந்நிலையில் கடந்த மாதம் சண்டை காட்சியில் நடிக்கும் போது நடிகர் விஷாலுக்கு காயங்கள் ஏற்பட்டன.




இதனைத் தொடர்ந்து படப்பிடிப்பை நிறுத்திவிட்டு காயங்களுக்கு சிகிச்சை பெற கேரளா கிளம்பினார் விஷால், கேரளாவில் பாலக்காடு அருகே உள்ள புகழ்பெற்ற பெரிங்கோடு குருகிருபா ஆயுர்வேத சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது குணமாகி மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள துவங்கியுள்ளார் நடிகர் விஷால்.

Similar News