நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் மற்றும் நடிகர் தனுஷின் மனைவியுமாகிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். இந்நிலையில் நேற்று திடீரென மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள செய்தியில், "காய்ச்சல் மற்றும் தலைசுற்றல் இருப்பது போல் உணர்கிறேன் அதனால் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளேன்" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த தகவலை அவர் வெளியிட்டவுடன் ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் ரசிகர்கள் அவர் நலம் பெற வேண்டி வாழ்த்தி வருகின்றனர்.