முத்தையா இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன்

Update: 2022-03-09 12:00 GMT

உலகநாயகன் கமலஹாசன் அடுத்தபடியாக இயக்குனர் முத்தையாவுடன் இணைந்து ஒரு படம் நடிக்கவிருக்கிறார்.




தற்பொழுது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து முடித்துள்ள கமல்ஹாசன் அடுத்தபடியாக கிராமத்துப் பின்னணியைக் கொண்ட ஒரு கதையில் நடிப்பதாக முடிவெடுத்துள்ளதாக ராஜ்கமல் தயாரிப்பு தரப்பு தெரிவித்தது. இந்நிலையில் இயக்குனராக யாரை ஒப்பந்தம் செய்யலாம் என்று பலர் பரிசீலனையில் இருந்து நிலையில் இயக்குனர் முத்தையா கமல் நடிக்கும் கிராமிய கதையை இயக்குவார் என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.




இயக்குனர் முத்தையா குட்டிப்புலி, கொம்பன் ஆகிய படங்களை ஏற்கனவே இயக்கியுள்ளார். தற்போது கார்த்தியை வைத்து 'விருமன்' இயக்கிவருகிறார். 'விருமன்' படம் விரைவில் திறப்பு திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Similar News