"மாறன் படத்துக்காக என்னை சிபாரிசு பண்ணது தனுஷ்" என மாறன் பட கதாநாயகி மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி நடித்து விரைவில் ஓ.டி.டி தளத்தில் வெளிவர உள்ள படம் 'மாறன்', இப்படம் குறித்து தனியார் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் மாளவிகா மோகனன் கூறியதாவது, "மாறன் படத்திற்காக என்னை சிபாரிசு செய்தது நடிகர் தனுஷ்" என்றார்.
மேலும் கூறிய அவர், "இயக்குனர் கார்த்திக் நரேனிடம் 'தாரா கேரக்டருக்கு மாளவிகா சரியாக இருப்பார்கள்' என தனுஷ் தான் என்னை பற்றி சொல்லியிருக்கிறார், ஒரு சீனியர் நடிகரா எப்படி எல்லாம் நடிக்கணும்னு மாஸ்டர் கிளாஸ் மாதிரி சொல்லிக் கொடுத்திருக்கிறார்" தனுஷ் எனக் கூறினார்.