சூப்பர் ஸ்டார் படத்தில் பிரியங்கா மோகன்

Update: 2022-03-16 07:15 GMT

நெல்சன் திலீப்குமார் இயக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தன் புதிய படத்தில் இளம் கதாநாயகி பிரியங்கா மோகன் இணைய உள்ளார்.



சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் 'டாக்டர்' இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்திருந்தார், முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த இவர் அடுத்தபடியாக சூர்யாவுக்கு ஜோடியாக 'எதற்கும் துணிந்தவன்'படத்தில் நடித்தார். தற்போது இவரது நடிப்பில் 'டான்' திரைப்படம் உருவாகி வருகிறது.




இந்நிலையில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து ஒரு படம் இயக்க உள்ளார், இப்படத்தில் நடிகை ப்ரியங்கா மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News