'அரபிக்குத்து' சாதனையை தட்டி தூக்குமா 'ஜாலியோ ஜிம்கானா'?

Update: 2022-03-17 12:30 GMT

பீஸ்ட் படத்தின் இரண்டாம் சிங்கிலான "ஜாலியோ ஜிம்கானா" பாடல் வரும் 19'ம் தேதி வெளியிடப்போவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.




இயக்குனர் நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில், அனிருத் இசையில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே நடித்து வெளிவரவிருக்கும் படம் 'பீஸ்ட்' இப்படத்தின் முதல் பாடலான 'அரபிக்குத்து' வெளியாகி பலத்த வரவேற்பை பெற்றது. யூட்யூபில் இதுவரை தமிழ் சினிமாவின் பாடல்கள் அனைத்தும் நிகழ்த்திய சாதனையை 'அரபிக்குத்து' பாடல் தட்டி தூக்கியது.




இந்நிலையில் 'பீஸ்ட்' படத்தின் இரண்டாம் பாடலான 'ஜாலியோ ஜிம்கானா' என்ற பாடல் நாளை மறுநாள் மார்ச் 19'ஆம் தேதி வெளியாகிறது, இதனை நேற்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் இப்பாடலில் கேஷுவலான தோற்றத்துடன் அனிருத், விஜய் மற்றும் நெல்சன் இடம்பெற்றிருக்கும் பிரமோ நேற்று வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

Similar News