துல்கர் சல்மான் கானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கும் திரையரங்கு உரிமையாளர்கள்

Update: 2022-03-17 12:15 GMT

நடிகர் துல்கர் சல்மானின் படங்களை புறக்கணிக்க திரையரங்கு உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.




தற்பொழுது நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள 'சல்யூட்' திரைப்படம் வரும் மார்ச் 18 ஆம் தேதி நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் இயக்கியுள்ள இப்படத்தை வெளியிடுவதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.




காரணம் 'சல்யூட்' திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது, ஆனால் கொரோனா மூன்றாவது அலை உருவானதன் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருந்ததால் படத்தை வெளியிட முடியவில்லை, இதன் காரணமாக படம் தள்ளிப் போக கூடாது என படக்குழுவினர் ஓடிடி தளத்திற்காக பேசி படத்தை ஓடிடி தளத்திற்கு ஒளிபரப்பு உரிமம் வழங்கி விட்டனர். ஆனால் பேசியபடி திரையரங்குகளுக்கு தான் படத்தை விநியோகம் செய்ய வேண்டும் என திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்கொடி தூக்கி உள்ளனர். இதனால் எதிர்வரும் காலங்களில் துல்கர் சல்மானின் படத்தை திரையரங்குகளில் வெளியிட எதிர்ப்பு தெரிவிக்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Similar News