Oதனுஷ் படத்தை உதாசீனப்படுத்திய ஒருவர் இரண்டு ஆண்டுகள் கழித்து 'எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள்' என கெஞ்சியது ஞாபகம் வருகிறது என இயக்குனர் கஸ்தூரிராஜா தெரிவித்துள்ளார்.
தங்கர்பச்சான் இயக்க அவரது மகன் விஜித்பச்சான் கதாநாயகனாக நடித்துள்ள 'டக்கு முக்கு திக்கு தாளம்' பட விழாவில் இயக்குனரும், நடிகர் தனுஷின் தந்தையுமாகிய கஸ்தூரி ராஜா பேசுகையில் கூறும்போது, "தனுஷ் நடித்த துள்ளுவதோ இளமை ஒருவருக்கு பிரத்தியோகமாக போட்டுக் காண்பித்தேன் அவர் பாதியிலேயே கிளம்பிவிட்டார் நான் அவரிடம் போனில் பேசியபோது நம்ம பையனை நாம பாக்கலாம், காசு கொடுத்து பார்ப்பவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என போனை வைத்து விட்டார்" என்றார்.
ஆனால் இரண்டு வருடங்கள் கழித்து 'எப்படியாவது தனுஷ் படத்தை வாங்கி கொடுங்கள்' என அவரே கேட்டார் என கஸ்தூரிராஜா கூறினார்