"ராக் வித் ராஜா" - அதிரப் போகும் தீவுத்திடல்

Update: 2022-03-18 12:30 GMT

சென்னை தீவுத்திடலில் இன்று இசைஞானி இளையராஜாவின் "ராக் வித் ராஜா" என்ற பெயரில் பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.




சமீபத்தில் துபாய் எக்ஸ்போவில் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்திய இசைஞானி இளையராஜா மார்ச் 18 ஆம் தேதியான இன்று சென்னையில் உள்ள தீவுத்திடலில் 'ராக் வித் ராஜா' என்ற பெயரில் ஒரு பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி நடத்துகிறார். இதில் இளையராஜாவுடன் பிரபல இசையமைப்பாளர்கள் மற்றும் பின்னணிப் பாடகர்கள் பங்கேற்க உள்ளனர்.




மேலும் இந்த இசை நிகழ்ச்சியில் தற்போது இசை அமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தும் இணைய உள்ளார், இதுகுறித்த தகவல் அறிவிப்பை இசைஞானி இளையராஜா தரப்பு வெளியிட்டுள்ளது.

Similar News