"கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்" - அஜித் பட வாய்ப்பு பற்றி பூரிக்கும் விக்னேஷ் சிவன்

Update: 2022-03-19 13:15 GMT

'காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்' என அஜித் பட வாய்ப்பு பற்றி விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.




சமீபத்தில் நடிகர் அஜித் நடித்த வலிமை திரைப்படம் திரையரங்குகளில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் அஜித்தின் 62வது படத்தை யார் இயக்குவார்? என்ற பரபரப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்த நிலையில் இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கப்போவதாக நேற்று அறிவிப்பு வெளியானது. இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது, இசையமைப்பாளராக அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




முதன் முறையாக அஜீத் நடிக்கும் படத்தை இயக்க உள்ளது பற்றி இயக்குனர் விக்னேஷ் சிவன் கூறுகையில், "எல்லாமே இனி மேல் நல்லாதான் நடக்கும்! காணும் கனவெல்லாம் இறைவன் அருளால் பலிக்கும்" என பதிவிட்டுள்ளார். வலிமை மற்றும் என்னை அறிந்தால் படத்தில் விக்னேஷ் சிவன் தலா ஒரு ஒரு பாடல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News