படம் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் சென்சாருக்கு சென்றுள்ளது விஜய் நடித்த 'பீஸ்ட்'.
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜாஹெக்டே நடித்துள்ள படம் 'பீஸ்ட்'. விஜய் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 13'ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதுவரை வெளியான இரண்டு பாடல்களும் ரசிகர்களிடத்தில் பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில் படம் சென்சார் சான்றிதழுக்காக சென்சார் குழுவினருடன் சென்றுள்ளது. இன்னும் இரு தினங்களில் படத்தின் சென்சார் வெளியாகும் என தெரிகிறது, சென்சார் வெளியான சில நாட்களிலேயே படத்தின் டிக்கெட்டுகள் விற்பனை தொடங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.