தனது மகளை அறிமுகப்படுத்தியுள்ளார் மகேஷ்பாபு.
பரசுராம் இயக்கத்தில் மகேஷ்பாபு நடித்துள்ள படம் 'சர்க்காரு வாரி பாட்டா', கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ள இப்படம் மே மாதம் 12ஆம் தேதி திரைக்கு வருகிறது. இப்படத்திலிருந்து 'பென்னி' என்ற இரண்டாவது பாடலை நேற்று வெளியிட்டனர். இதில் மகேஷ்பாபு மட்டுமின்றி அவரது மகள் சித்தாரா'வும் நடனமாடியிருக்கிறார், இதன் மூலம் மகேஷ் பாபு தனது மகளை தன் படத்திலேயே அறிமுகம் செய்துள்ளார். இதனால் அந்த பாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
பாடல் வெளியான 20 மணி நேரத்தில் ஒரு கோடிக்கும் அதிகமான பார்வையாளர்கள் கண்டு களித்துள்ளனர். இன்னும் சில காலம் கழித்து மகேஷ் பாபு தனது மகளை அறிமுகப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் தற்போதே அறிமுகப்படுத்தி விட்டார் மகேஷ்பாபு.