நடிகர் சங்கத்தினர் அறங்காவலர் குழுவில் கமலஹாசன் உட்பட பேரை நியமனம் செய்ய செய்துள்ளனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர், நடிகர் நாசர் தலைமையில் அனைத்து நடிகர்களின் முன்னிலையில் விஷால், கார்த்தி போன்றோரும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் அறங்காவலர்களாக கமலஹாசன் உட்பட 9 பேரை நியமித்துள்ளனர் நடிகர் சங்க நிர்வாகிகள். குழுவின் நிர்வாக அறங்காவலராக நாசர் நியமிக்கப்பட்டுள்ளார். உறுப்பினர்களாக கமலஹாசன், சச்சு, லதா, பூச்சி முருகன், ராஜேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.