ராமர் வேடத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் பார்க்க சென்ற ரசிகர்கள்

Update: 2022-03-25 14:00 GMT

ஹைதராபாத்தில் ஆர்.ஆர்.ஆர் படம் பார்க்க ராமர் வேஷத்திர் ரசிகர்கள் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.




 


இயக்குனர் ராஜமவுலி இயக்கிய படம் ஆர்.ஆர்.ஆர் இன்று இந்தியா முழுவதும் வெளியாகியது, ஐந்து மொழிகளில் வெளியாகிய படத்தை பார்க்க ரசிகர்கள் ஆர்வமுடன் திரையரங்கிற்கு படையெடுத்து வருகின்றனர். இப்படத்தில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியாபட், அஜய்தேவ்கன் ஆகியோர் நடித்துள்ளனர்.




இப்படத்தின் இறுதிக் காட்சியில் கதாநாயகன் ராம்சரண் ராமர் வேடத்தில் வந்து ஆங்கிலேயர்களுடன் சண்டை போடுவது போன்ற காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதால் ஹைதராபாத்தில் ராமர் வேடமிட்டு ரசிகர்கள் ஊர்வலமாக சென்று படம் பார்க்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar News