புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் கோரிக்கை ஒன்றை வைத்துள்ளார்.
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 20-வது படத்தில் நடிக்கிறார் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் முதல் ஷட்யூல் நடைபெற்று முடிந்தது, அடுத்த கட்ட படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடந்து வருகிறது.
இந்நிலையில் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடைபெற்ற சமயத்தில் மரியாதை நிமித்தமாக புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியை நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்துள்ளார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் படப்பிடிப்பு நடத்தும் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.