பேட்மேன் சாதனையை தட்டி தூக்கிய ஆர்.ஆர்.ஆர் - இந்திய சினிமாவில் புதிய வசூல் சாதனை

Update: 2022-03-29 09:00 GMT

உலக சினிமா வரலாற்றில் இந்திய திரைப்படமான ஆர்.ஆர்.ஆர் வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளது.




இதுவரை வெளியான இந்திய சினிமாக்களில் ஆர்.ஆர்.ஆர் மாபெரும் வசூல் சாதனையை வெளியான சில நாட்களிலேயே நிகழ்த்தி வருகிறது. இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் மற்றும் பலர் நடித்த ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த வாரம் மார்ச் 25'ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் வெளியான சில நாட்களிலேயே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.




எழுபத்தி ஏழு நாடுகளில் வெளியான ஹாலிவுட் படமான 'தி பேட் மேன்' படம் 4.55 கோடி யு.எஸ் டாலர்களை வசூலித்து இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது, முதலிடத்தை 6.32 கோடி யு.எஸ் டாலர்களை வசூலித்து ஆர்.ஆர்.ஆர் தட்டி தூக்கியுள்ளது. இது இந்திய சினிமாவிற்கு கிடைத்த ஒரு மகத்தான பெருமையாகும்.

Similar News