இயக்குனர் முத்தையா உடன் இணையும் விஷால்

Update: 2022-03-30 13:00 GMT

லத்தி படத்திற்கு அடுத்தபடியாக விஷாலின் 34'வது படத்தை முத்தைய்யா இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.





தற்பொழுது லத்தி படத்தில் நடித்துவருகிறார் விஷால் அதனை தொடர்ந்து துப்பறிவாளன், மார்க் ஆண்டனி போன்ற படங்கள் வெளியாகவிருகின்றன. இந்நிலையில் அடுத்த படமான 34'வது படத்தை இயக்குனர் முத்தையா இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




தற்பொழுது முத்தையா கார்த்தி, அதிதி ஷங்கர் நடிக்கும் 'விருமன்' படத்தை இயக்கி வருகிறார், வரும் கோடை விடுமுறையில் 'விருமன்' படம் வெளியாகவிருகின்ற நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் முத்தையா இயக்கத்தில் விஷால் நடிப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே விஷால் நடித்த மருது படத்தை இயக்கியவர் 'முத்தையா' என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News